வெற்றிபெறத் தடுமாறி வரும் சிங்கப்பூர் U-22 காற்பந்துக் குழு

சிலாங்கூர்: எதிர்மறை விமர்சனங் கள் 22 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் செயல்பாட் டைப் பாதித்திருப்பதாக தற்காப்பு ஆட்டக்காரர் இர்ஃபான் ஃபாண்டி தெரிவித்துள்ளார். இம்மாதம் 19ஆம் தேதி கோலா லம்பூரில் தென்கிழக்காசியப் போட் டிகள் தொடங்கவுள்ளன. இருந் தாலும் காற்பந்து போன்ற குழு விளையாட்டுகளில் சில முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அந்த வகையில், காற்பந்துப் போட்டிகளில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சிங்கப்பூர்க் குழு, நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் 0=2 என்ற கோல் கணக்கில் மியன்மாரிடம் மண் ணைக் கவ்வியது. இதனுடன் சேர்த்து, கடந்த மார்ச் மாதம் முதல் 17 போட்டிகளில் பங்கேற்றுள்ள அக்குழு 12 போட்டி களில் தோற்றுள்ளது. மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குழுவின் செயல்பாடு மீதான எதிர்மறை விமர்சனங்களும் இதற் கொரு காரணம் என்று குறிப்பிட் டார் ஃபாண்டி.

“விமர்சனங்கள் எல்லாரையும் பாதித்துள்ளன. சில நேரங்களில் ஆட்டம் முடிந்தபின் அதனைக் காணலாம். ஆனால், காற்பந்தில் விமர்சனங்களையும் கருத்து களையும் தவிர்க்க முடியாது. “இது பற்றி நாங்கள் ஒருவருக் கொருவர் பேசிக்கொண்டோம். எதிர்மறை விமர்சனங்கள் எழக் கூடாது எனில் நாங்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்பதை உணர்ந் துள்ளோம்,” என்றார் இர்ஃபான். இந்நிலையில், இன்று நடக்க இருக்கும் 2வது ஆட்டத்தில் பரம எதிரியான மலேசியாவுடன் சிங்கப் பூர்க் குழு மோதுகிறது. முதல் போட்டியில் இடம்பெறாத குழுத் தலைவர் ஷாரின் சபெரின் இன்று களமிறங்குவார் எனத் தெரிகிறது.