சாபாவில் வெள்ளப்பெருக்கு; பள்ளிகள் மூடல்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கோத்தா கினபாலுவில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் நேற்று மூடப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். வகுப்புகளுக்கு செல்ல முடியாததால் மொத்தம் 3,806 மாணவர்களும் 272 ஆசிரியர் களும் பாதிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் மைமுனா சுஹைபுல் கூறினார். வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பல சாலைகள் பழுதடைந் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மலாக்காவிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி பலர் வெளி யேற்றப்பட்டு வருகின்றனர்.