பாலித் தீவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாவனைப் பயிற்சி

நிலநடுக்கம் ஏற்பட்டால் அல்லது சுனாமி அலை தாக்கினால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியின்போது மாணவர்கள் மேசைகளுக்கு அடியில் இருந்தபடி தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். மாணவர்கள் தங்கள் பைகளை தலைகளில் வைத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தை நாடி ஓடுவதும் நேற்றைய பயிற்சியில் இடம்பெற்றிருந்தது. இந்தோனீசியாவை அடிக்கடி நிலநடுக்கம் உலுக்குவதால் அதன் பாதிப்பிலிருந்து தப்பவும் அதனை சமாளிக்கவும் உதவும் வகையில் அங்கு மாணவர்களுக்கும் மக்களுக்கும் பாவனைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next