தமிழகத்தில் 5,000 பேருக்கு டெங்கி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தமிழக அரசு அதை அறவே மறுத்து வந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஐந்தா யிரம் பேருக்கு டெங்கி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அரசே அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் டெங்கி சிகிச்சை பிரிவைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஐந்தாயிரம் பேருக்கு டெங்கி பாதிப்பு இருப்பது கண் டறியப்பட்டுள்ளதாகவும் அவர் களைக் குணப்படுத்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது என்றும் ஒப்புக்கொண்டார். “தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு டெங்கி காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தற்போது புதிதாக டெங்கி அறிகுறி உள்ள இடங்க ளிலும் தீவிர கவனம் செலுத்தப் படுகிறது.

“காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளுக்கு வருவோரை உள்நோயாளிகளாக அனுமதித்து பரிசோதனை செய்து, தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதால் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறதே தவிர, அனைவரையும் டெங்கியால் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதக் கூடாது,” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் 90 இடங்களில் காய்ச்சலைக் கண்டறியக்கூடிய எலிசா சோதனை மையங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மையங்களின் பரிசோதனை விவரங்கள் இணையத்தளம் மூலம் மத்திய அரசுக்குத் தெரி விக்கப்படுகிறது என்றார். அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் டெங்கி காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு கூறுவதாகச் சுட்டிக் காட்டிய அமைச்சர் விஜயபாஸ கர், அனைத்து வகையான காய்ச்சலையும் டெங்கியாகக் கருதக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

Loading...
Load next