பிரிட்டனைச் சேர்ந்த மூவருக்குச் சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் கார்ல்டன் ஹோட்ட லில் மலேசியாவை சேர்ந்த 22 வயது மாது ஒருவரை மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்த பிரிட்டனை சேர்ந்த மூன்று பேருக்கு ஐந்தரை ஆண்டு முதல் ஆறரை ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரம்படி கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. மூவரும் குறைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மூவரில் ஒருவரான கோங் தாம் தான், 22, என்பவருக்கு ஆறாண்டு சிறையும் எட்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. ஊ தாய் சன், 24, என்ப வருக்கு ஆறரை ஆண்டுச் சிறை யும் எட்டு பிரம்படிகளும் விதிக் கப்பட்டன. மைக்கேல் லி, 24, என்பவருக்கு ஐந்தரை ஆண்டுச் சிறையும் ஐந்து பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அந்த மாதை தவறான முறையில் கட்டுப்படுத்தி வைத்து அவருடன் பாலியல் தொடர்பு கொண்டதை மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கோங் தாம் தான், ஊ தாய் சன் இருவரும் அந்த மாதை மற்றொரு முறை பாலியல் பலாத் காரத்துக்கு உட்படுத்திய குற்றத்தையும் ஒப்புக் கொண் டனர். லிக்கு ஆறு ஆண்டு சிறை யும் தான்னுக்கும் சன்னுக்கும் ஏழு ஆண்டு சிறையும் விதிக்கப் பட வேண்டும் என்று வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜி. கண்ணன், “இவர்கள் மூவரும் அந்தப் பெண்ணை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர்,” என்றார்.

தண்டனை விதிக்கப்பட்ட மைக்கேல் லி, (இடது) கோங் தாம் தான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon