சுகாதாரப் பராமரிப்பு மேம்பட தரவுப் பகுப்பாய்வு

சிங்கப்பூரில் தரவுப் பகுப்பாய்வுகள் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் ஹெங் கீ தெரிவித்து இருக்கிறார். மரினா பே சாண்ட்சில் நேற்று சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகப் பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், சில மருத்துவமனைகள் ஏற்கெனவே தரவுப் பகுப்பாய்வு களைப் பயன்படுத்தி நோயாளி களுக்கான சேவைகளை மேம் படுத்தி இருப்பதாகக் கூறினார். அடிக்கடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை உள்ள நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் முன்கூட் டியே மருத்துவமனைகள் தொடர்பு கொள்கின்றன. இதனால் அவர்கள் மறுபடியும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. தரவுப் பகுப்பாய்வுகளின் விளைவாக ஏராளமான சுகாதாரப் பராமரிப்பு, சமூக, பொருளியல் தகவல்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுதிரட்டி அவற்றைப் பகுத்து ஆராய்ந்து பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

உன்னதமான சுகாதாரப் பராமரிப்பு என்பது என்ன என்றும் அவர் விளக்கினார். அதிநவீன மருந்துகள், அதி நவீன சாதனங்கள், சிறப்பு வல்லு நர்கள் ஆகிய வளங்களுடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டும் உன்னதமான மருத்துவப் பராமரிப்பு ஆகாது. பெரும்பாலான நோயாளிகள் இதை விரும்புவதும் இல்லை. வீட்டிலேயே தங்கியிருந்து, விரை வில் குணம் அடைந்து, விரைவில் வேலைக்குச் செல்ல அல்லது நன்கு சாப்பிட்டு மகிழ அல்லது விரும்பிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றே நோயாளி கள் விரும்புகிறார்கள். இதைச் சாத்தியமாக்குவதுதான் உன்னதமான மருத்துவப் பராம ரிப்பு என்று இந்த வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1,000 சுகாதாரப் பராமரிப்பாளர்களிடையே உரையாற்றிய திரு சான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் ஒரு மருத்துவப் படுக்கை அறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்