சுடச் சுடச் செய்திகள்

சமயத்தின் பெயரால் வன்முறை கூடாது

சமயங்களின் பெயரால் நடை பெறும் வன்முறைகளை ஒதுக்கித் தள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தலைநகர் புது டெல்லியில் உள்ள செங்கோட்டை யில் இந்தியாவின் 70வது சுதந் திர தின உரையாற்றிய அவர், சமயத்தின் பெயரால் சில வேளை களில் சிலர் நடத்தும் செயல்கள் நாட்டின் அடிப்படையையே உலுக் குவதாக குறைகூறினார். மேலும் சமயத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் திரு மோடி தெரிவித்தார். “இது மகாத்மாவும் புத்தரும் அவதரித்த நாடு. இங்கு நம்பிக் கையின் பெயரிலான வன் முறைக்கும் வகுப்புவாதத்திற்கும் இடமில்லை. சுதந்திரத்திற்கு முன்பு ‘வெள்ளையனே வெளி யேறு’ என்று முழங்கிய நாம் இப்போது ‘இந்தியாவை ஒற்று மைப்படுத்து’ என்று முழங்க வேண்டியுள்ளது,” என்றார் திரு மோடி.

சுதந்திர தின உரையாற்றச் சென்ற பிரதமர் மோடி, கிருஷ்ணர் வேடத்தில் அணிவகுத்து நின்றிருந்த சிறுமியரிடம் பேசி அவர்களை மகிழச் செய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon