படப்பிடிப்பு முடிந்தது; நவம்பரில் வெளியாகும் ‘ஸ்கெட்ச்’

விக்ரம் நடிப்பில் வெளியான அண்மைய படங்களின் வசூல் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ மிக சுவாரசி யமாக உருவாக்கப்பட்டு இருப்பதாகத் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத் துள்ளது. இந்தப் படம் விக்ரம் ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் எனப் படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இம்முறை தமன்னாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விக்ரம். வட சென்னை பின்னணியில் அதிரடி சண்டைகள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது ‘ஸ்கெட்ச்’.

முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலை யாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகி ஷன், விஷ்வாந்த், மாலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னர், நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `ஸ்கெட்ச்’ படத்தை முடித்த கையோடு, `துருவ நட்சத்திரம்’ படப் பிடிப்பில் பங்கேற்க உள்ளார் விக்ரம். அதையடுத்து ஹரி இயக்கத்தில் `சாமி 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், திரிஷா, பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் ‘சாமி 2’ படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், திருநெல் வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப் பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.

‘ஸ்கெட்ச்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் விக்ரம், தமன்னா.