அன்பையே தேர்ந்தெடுங்கள் - சிம்பு

அன்பாகச் சொல்லிப் பார்த்தார், பிறகு சீறினார், கடைசியாக எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிம்புவின் முயற்சிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து அதிரடியாக ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார் அவர். வேறொன்றுமில்லை... அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளி யேறுவதாக அவர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எதிர்மறை எண்ணங்கள் பரவிவருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. சர்ச்சைகளில் சிக்குவது சிம்புவுக்குப் புதிதல்ல. எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், அவற்றுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார். கடைசியாக நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வி சிம்புவை வெகுவாகப் பாதித்த தாகக் கூறப்படுகிறது. எனினும் தனது அடுத்த படம் குறித்த சூசகமான அறிவிப்புகளை வெளியிட்டார். தனது படங்கள் குறித்து வெளியாகும் அதிகாரபூர்வத் தகவல்களை மட்டுமே ரசிகர்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சிம்பு, சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னைப் பற்றி சகட்டுமேனிக்குத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவுக்கு சிம்பு ஆதரவுக்கரம் நீட்ட, இருவரும் திருமணம் செய்துகொள்வதாகத் தகவல் வெளியானது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிம்பு, தன்னைப் பற்றி தவறான தகவல்களை, கருத்துகளை யாரும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங் களில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். “எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தனை தான் எனது வலிமை. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக் கம் செலுத்துகின்றன. அதில் பங்கு வகிக்க எனக்குப் பயமாக இருக்கிறது. “ஒரு நட்சத்திரத்திற்கு சமூக ஊடகம் அவசியம்தான். ஆனால் நான் என் மனம் சொல்வதைக் கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந் தெடுங்கள்,” என்று சிம்பு தனது கடைசி சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.