சீன இறக்குமதி குறித்து இந்தியா மறுஆய்வு

சீனாவில் இருந்து பெருமளவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பச் சாதனங்களை இறக்கு மதி செய்துவரும் இந்தியா அதுகுறித்து மறு ஆய்வு செய்து வருகிறது. பாதுகாப்பு குறித்த அக்கறையும் தரவுகள் கசிவதாக எழுந்துவரும் புகார்களுமே அதற்குக் காரணம். இந்தியா=சீனா-=பூட்டான் நாடுகளின் எல் லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதி தொடர்பில் இந்தியா=சீனா இடையே பூசல் நிலவி வரும் வேளையில் அவ்விரு நாடு களுக்கு இடையே வர்த்தக ரீதியாகவும் மோதல் வெடிப்பதற்கு அறிகுறியாக இந்த மறுஆய்வு பார்க்கப்படுகிறது. கைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்புச் சாதனங்கள், மருத்துவச் சாதனங்கள், உணர் கருவிகள் உட்பட இந்தியாவின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீன நிறுவ னங்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதாக, அதாவது $30 பில்லியன் (ரூ.141,000 கோடி) அளவிற்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன், இந்திய இணையச் சந்தை களிலும் முன்னணி சீன நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன. இந்த நிலையில், சீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தனிமனிதர்கள், நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் தொடர் பான முக்கியத் தகவல்கள் திருடப்படலாம் என இந்திய அரசாங்கம் அஞ்சுவதாகக் கூறப் படுகிறது.