சுடச் சுடச் செய்திகள்

புதிய கற்றல் இணையவாயில்

தொடக்கப் பள்ளிகள் முதல் தொடக்கக் கல்லூரிகள் வரை பள்ளி மாணவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும், எந்த இடத் திலும் இருந்தபடி, கற்றல் வளங் களைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வேகத்திற்கு ஏற்ப கற்க ஏதுவாக புதிய கற்றல் இணைய வாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது 62 தொடக்க, உயர் நிலைப் பள்ளிகளில் சோதனை முயற்சியாக இடம்பெற்று வரும் அந்த ‘சிங்கப்பூர் மாணவர் கற்றல் வெளி’ திட்டம், அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆங்கிலம், கணிதம், வரலாறு, உடற்கல்வி உள்ளிட்ட முக்கியப் பாடங்களைக் கற்பதற்கும் கற்பித் தலுக்கும் துணை செய்யும் வித மாக இந்த இணையவாயில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது கற்ற லில் அதிக பங்கு எடுத்து, சக மாணவர்களுடன் இணைந்து செயல்பட வைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். காணொளிகள், அசைவுப் படங்கள், பாவனைகள், விளை யாட்டுகள், புதிர்கள் போன்ற வளங் களால் மாணவர்கள் தங்கள் வேகத்திற்கேற்ப கற்றுக்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. வகுப்பறைகளில் படிக்கும் கோட்பாடுகளை நிகழ் உலகுடன் பொருத்திப் பார்க்கும் வகையில் தொழிலக, வெளிப்புறப் பங்காளி களுடன் இணைந்து இந்தக் கற்றல் வளங்களில் பெரும்பாலானவை உருவாக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, கீழ் உயர் நிலை வகுப்புகளில் மாணவர்கள் கற்கும் அறிவியல் பாடத்துடன் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டு வரும் கடல்நீர்ச் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில் இப்போதைய மேம்பாடுகள் என்ன என்பதை இணைத்து பொதுப் பயனீட்டுக் கழகத்துடன் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு காணொளி ‘சிங்கப்பூர் மாணவர் கற்றல் வெளி’யில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், பாடங்களை வடி வமைப்பதிலும் நடத்துவதிலும் இந்த இணைய வாயில் மூலம் ஆசிரியர்களுக்கும் அதிக உதவி கள் கிட்டும் என்று அமைச்சு குறிப்பிட்டது. மாணவர்களிடம் ஆராய்ந்து தெளிதல், குழுவாக இணைந்து செயல்படுதல் போன்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கற்றல் வளங்களை ஆசிரியர்களால் வடி வமைக்க இயலும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon