சியாரா லியோனில் நிலச்சரிவு; இதுவரை 400 சடலங்கள் மீட்பு

ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் தலைநகர் ஃபிரீ டௌன் வெள்ளத்தாலும் நிலச்சரி வாலும் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பேரிடரில் நகரின் சில பகுதிகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. ஏறக்குறைய 400 பேர் மாண்டதாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 600 பேரைக் காணவில்லை என்று அதிபரின் பேச்சாளர் அப்துலாய் பரேத்தே தெரிவித் தார். “தேடுதல் பணி தொடர்ந்து நடந்துவரும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 400 சடலங்களை மீட்டுள்ளோம். பலி எண்ணிக்கை ஐநூறைத் தாண்டும் என்று எதிர் பார்க்கிறோம்,” என்று தலைமை மரண விசாரணை அதிகாரி செனே டும்புயா கூறினார். மத்திய பிணவறைக்கு ஏராள மான சடலங்கள் வந்து சேர்ந்தன. போதிய இடமில்லாததால் சடலங் கள் தரையிலும் கட்டடத்திற்கு வெளியிலும் கிடத்தப்பட்டிருந்தன என்று ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி குறிப் பிட்டது. இதையடுத்து, உயிரிழந்தவர் களை நேற்று ஒரே இடத்தில் புதைக்கத் திட்டமிடப்பட்டது. சேற்றில் இருந்தும் இடிபாடு களில் இருந்தும் சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரு வதாகத் திரு பரேத்தே கூறினார்.

காணாமல் போன 600க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next