10,000 முட்டைகளைக் கொண்டு ‘மெகா’ ஆம்லெட்

பெல்ஜியம் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மால்மேடீ நகரில் உள்ள நகர சதுக்கத்தில் பத்தாயிரம் முட்டைகளைக் கொண்டு பிரம்மாண்ட ஆம்லெட் சமைக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த வருடாந்திர ‘மெகா’ ஆம்லெட் சமைக்கும் திரு விழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நான்கு மீட்டர் விட்டத்துடன் கூடிய பாத்திரத்தில் 10,000 முட் டைகளுடன் பன்றி இறைச்சியும் மூலிகையும் கலந்து சமைக்கப்பட்ட இந்த ஆம்லெட், பின்னர் அங்கு கூடியிருந்தவர்களுக்குப் பரிமாறப் பட்டது. இந்த ஆம்லெட் திருவிழாவின் தலைவரான பெனடிக்ட் மேத்தி கூறுகையில், “உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு பூச்சிக் கொல்லி முட்டைகளில் இருப்பதாக உலகம் முழுவதும் அச்சம் நிலவி வருகிறது. ஆயினும், ஒரு தட்டு ஆம்லெட் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடாது என்று நான் நம்புகிறேன்,” என்றார். ‘ஃபிப்ரோனில்’ எனும் பூச்சிக் கொல்லி இருப்பதாகக் கூறி மில்லியன்கணக்கான கோழி முட்டைகள் ஐரோப்பிய பேரங்காடி களில் இருந்து திரும்பப் பெறப் பட்டன. நெதர்லாந்தில் பல்லாயிரக் கணக்கான கோழிகள் கொன்று ஒழிக்கப்பட்டன.

உடலுறுப்புகளைப் பாதிக்கவல்ல, நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கூறி மில்லியன்கணக்கான முட்டைகள் ஐரோப்பிய பேரங்காடிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், “ஒரு தட்டு ஆம்லெட் சாப்பிடுவதால் ஒன்றும் நேர்ந்துவிடாது,” எனக் கூறி, கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வரும் பிரம்மாண்ட ஆம்லெட் சமைக்கும் திருவிழாவை இந்த ஆண்டும் வெற்றிகரமாக நடத்தி ஆம்லெட் உண்டு மகிழ்ந்தனர் பெல்ஜியத்தின் மால்மேடீ நகரவாசிகள். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon