ஊழியர் விண்ணப்ப முறைகேடு: சகோதரிகளுக்கு அபராதம்

வேலை அனுமதிச் சீட்டுப் பெற போலித் தகவலை வழங்கிய குற்றத்திற்காக இரு சகோதரி களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. லியோங் சியூ பெங் (45) லியோங் சாவ் யீ (47) ஆகியோர் இரண்டு பேரை வெளிநாட்டுப் பணிப்பெண்கள் என்று பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களை அழகு பராமரிப்பாளர் களாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டிருந்தனர். வேலை அனுமதிச் சீட்டு பெறுவதற்காகப் போலித் தகவலை அளித்த குற்றத் திற்காக மூத்த சகோதரிக்கு $16,000 அபராதமும் இளையவருக்கு $15,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு வாரச் சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும்.

மனிதவள அமைச்சின் வேலை அனுமதிச் சீட்டு பிரிவின் அதிகாரிக்குப் போலித் தகவலை அளித்ததற்காக அவர்களுடைய வெளிநாட்டு ஊழியர்களான 33 வயது லேப்சா ரித்து, ஆர்த்தி ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரித்துவிற்கு $11,500 அபராதமும் ஆர்த்திக்கு $8,000 அபராதமும் விதிக்கபட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால் அவர்கள் இருவரும் நான்கு வாரச் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். போலித் தகவலைச் சமர்ப் பிப்பது கடுமையான குற்றம் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஷங்காய் நகரிலுள்ள ஷாங்ஜியாங் அனைத்துலக புத்தாக்கத் துறை முகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மனித இயந்திரத்தை இயக்கியப் பார்க்கிறார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

26 May 2019

ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்