சுடச் சுடச் செய்திகள்

பந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் மரணம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளை யாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் மர்தானின் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது இச்சம்பவம் நிகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பந்தடிப்பில் ஈடுபட்டிருந்த போது அவர் தலைகவசம் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். ஜூபைர் அகமது மரணத்திற்கு டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பந்தடிப்பாளர் கள் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலி யுறுத்தியுள்ளது. ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக 4 போட்டி களில் விளையாடி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் பிலிப் ஹூக்ஸ் உள்ளூர் போட்டியின் போது, பவுன்சர் பந்து பின்கழுத்துப் பகுதியில் தாக்கியதில் மைதானத் திலேயே நினைவு இழந்து சுருண்டு விழுந்து இறந்தார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது. மேலும் அண்மையில் பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்தி ரேலியாவின் டேவிட் வார்னருக்கு ஹேசல்வூட் வீசிய பந்து கழுத்துப் பகுதியைப் பலமாக தாக்கியது நினைவு கூரத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon