ஹோஃபன்ஹைமை வீழ்த்தி லிவர்பூல் எளிதில் வெற்றி

சின்சியம்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் முதல் ‘பிளே ஆஃப்’ சுற்றில் லிவர்பூல், ஹோஃபன் ஹைம் குழுக்கள் மோதின. புதிய ஆட்டக்காரர் அலெக் ஸாண்டர்-அர்னால்ட் மிக சாதுரி யமாக 35வது நிமிடத்தில் புகுத் திய கோலால் லிவர்பூல் முன் னிலைப் பெற்றது. முன்னதாக 11வது நிமிடத் தில் ஹோஃபன்ஹைம் குழுவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி அன்ரேஜ் கர்மேரிக் புகுத்திய கோலைத் தடுத்து விட் டார் லிவர்பூல் கோல்காப்பாளர் சிமோன் மினியோலெ. இந்த கோலை தடுக்காமல் விட்டிருந்தால், லிவர்பூலின் நிலைமை மிகவும் மோசமாகப் போயிருக்கும். லிவர்பூல் குழு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந் தாலும் நேற்றைய ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டிருக்கக்கூடிய வாய்ப்பு களை அது தவறவிட்டுவிட்டது. முதல் பாதி ஆட்டத்தில் ஃபிர்மினோ கடத்திய பந்தை கோலாக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார் முகமது சாலா. அதுபோல் லிவர்பூல் புகுத்திய மற்றோர் கோலைத் தடுத்துவிட்டார் ஹோஃபன்ஹைம் குழுவின் கோல் காப்பாளர்.

லிவர்பூல் வீரர்களுடன் உரையாடும் அதன் நிர்வாகி குளோப் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்