சுடச் சுடச் செய்திகள்

குண்டர் சட்டத்தில் பலர் கைது: தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

தூத்துக்குடி: மக்களின் வாழ்வாதாரங்களுக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவோரைத் தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது குண்டர் தடுப்பு ஆட்சியா? எனக் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளித்திருப்பது பிச்சை போடுவது போல இருப்பதாகக் குறிப்பிட்ட வைகோ, இத்தேர்வால் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்றார். அதிமுகவிற்குள் தற்போது குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.,” என்றார் வைகோ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon