சுடச் சுடச் செய்திகள்

ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் மலேசிய அகதியின் இறுதி கோரிக்கை

சிட்னி: மலேசியாவின் சர்ச்சைக் குரிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விவகாரத்தில் தொடர்புடைய மங் கோலியப் பெண்ணைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய அதிரடி போலிஸ் படையைச் சேர்ந்த சிருல் அஸார் உமர், 46 ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் இறுதி வேண்டு கோள் விடுத்துள்ளார். அதில் தமக்கு பாதுகாப்பு விசா வழங்க வேண்டும் என்றும் விண் ணப்பத்தைப் புறக்கணித்துவிட வேண்டாம் என்றும் ஆஸ்திரேலியா விருந்து வெளியேற்றப்பட்டால் தம்மை தூக்கிலிட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கு முன்பு மோசமான அர சியல் அல்லாத குற்றச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளதால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆஸ்திரேலியாவின் குடிநுழைவு எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். மலேசியாவில் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட முக்கிய பிரமுகர் களுக்குப் பாதுகாப்பு அதிகாரி களாகச் செயல்பட்ட சிருலுக்கும் மற்றொரு அதிரடிப் படை வீரரான அஸிலா ஹட்ரிக்குக்கும் 2009ல் மரண தண்டனை விதிக்கப்பட் டது. கடந்த 2006ல் மங்கோலிய மொழிபெயர்ப்பாளரும் விளம்பர அழகியுமான ஷாரிபுவை கொலை செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சிருல் அஸார் உமர். கோப்புப் படம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon