சுடச் சுடச் செய்திகள்

இருளில் மூழ்கிய தைவான்; மின் விநியோகம் மறுபரிசீலனை

தைப்பே: தைவானில் இருபது ஆண்டுகளில் இல்லாத மிக மோச மான அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டதால் மின் விநியோகக் கட்டமைப்புகளை முழுமையாக சோதனையிடும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு இறங்கியிருக் கிறது. செய்தியாளர்களிடம் நேற்று பேசிய பிரதமர் லின் சுவான், “நாட்டின் 17 நகரங்களிலும் சிறு நகரங்களிலும் ஏற்பட்டுள்ள மின் தடை, மின் விநியோகத்தில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தி யிருக்கிறது,” என்றார். இதையடுத்து மின் நிலையங் களில் உள்ள குறைகளையும் தவறுகளையும் கண்டுபிடிக்க மறுபரிசீலனைக் குழுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்த மான எண்ணெய் நிறுவனத்தில் மின் விநியோகத்தை மாற்றிவிடும் நடவடிக்கையின்போது மின் தடை ஏற்பட்டது. இதனால் தைவானின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. இதனைச் சுட்டிக்காட்டிய திரு லின், “இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகக் கருத முடியாது,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon