அபிசரவணன் நடிக்கும் 'இவன் ஏடாகூடமானவன்'

பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சிறிய தயா ரிப்புகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் இளம் நாயகன் அபிசரவணன். தற்போது அவர் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘இவன் ஏடாகூடமானவன்’. இப்படத்தில் இன்னொரு நாய கனாக யோகி அறிமுகமாகிறார். நாயகி காயத்ரி. இன்னொரு நாயகியாக அகல்யா அறிமுக மாகிறார். தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜாவையே வில்லனாக மாற்றிவிட்டார் இயக்குநர் ஜெஸ் டின் திவாகர். மேலும் பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர். அரசியல் பின்புலமுள்ள அதிகார வர்க்கத்தினர் சமூகத் தில் கௌரவமாக இருப்பவர் களின் சொத்துகளை மிகக் குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக்கொள் கிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞன் வெகுண்டெழுந்து எவ்வாறு மீட்கிறான் என்பதே இப்படத்தின் கதைக்களமாம். இதை காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து விதமான வணிக ரீதியிலான அம்சங்களைக் கலந்துகட்டி படமாக்கி இருப்ப தாகச் சொல்கிறார் இயக்குநர் ஜெஸ்டின் திவாகர்.

‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தில் அபிசரவணன், காயத்ரி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon