சுடச் சுடச் செய்திகள்

கர்நாடக சங்கீத கருத்தரங்கு - இசை முத்துக்கள்

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தஞ்சாவூர் பாரம்பரிய இசைப் பள்ளியின் நிறுவனர் திருமதி கௌரி கோகுல் அவர்கள் வழங்கும் ‘இசை முத்துக்கள்’ எனும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பாடல்களை இயற்றியவர்களையும் அந்தப் பாடல்களையும் பற்றிய இந்தக் கருத்தரங்கு வரும் செப்டம்பர் மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கர்நாடக சங்கீதத்தில் அறிமுகம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்துகொள்ள 40 வெள்ளி கட்டணம். swarna.ks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அதிக விவரங்களுக்கு 9025 1126, 9651 0427 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon