அதிபர் பதவி: மலேசிய ஊடக செய்திக்குத் தூதர் மறுப்பு

இவ்வாண்டு நடைபெற இருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலைப் பற்றி மலேசியாவின் ஆளுங்கட்சியான அம்னோவுக்குச் சொந்தமான நாளிதழான உத்துசான் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாக மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால மேனன் கூறியுள்ளார். இம்மாதம் 14ஆம் தேதியன்று உத்துசான் நாளிதழில் ‘சிங்கப்பூர் மலாய்க்காரர்களின் அதிர்ஷ்டம் மாறுமா? அதிபர் பதவி பெயருக்குத் தான்’ எனும் தலைப்பில் வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து திரு மேனன் அந்த நாளிதழுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் சிங்கப்பூரின் அதிபர், நாட்டை மேம்படுத்துவதிலும் நல்ல ஆட்சிமுறையை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிப்பவர் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த மே மாதம் 28ஆம் தேதியன்று இவ்வாண்டு சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல் பற்றி உத்துசான் நாளிதழ் அதன் தலையங்கத்தில் கருத்து தெரிவித்திருந்தது. அதில் வெளியான தவறான தகவலைச் சுட்டிக்காட்டி திரு மேனன் கடிதம் எழுதியிருந்தார். “நான் உத்துசானுக்கு எழுதிய கடிதத்தை அதன் ஆசிரியர் நாளிதழில் பிரசுரிக்கவில்லை. வாசகர்களுக்கு உண்மை நிலவரத் தைக் காட்டுவதில் அவருக்கு நாட்டம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. “மாறாக, சிங்கப்பூரின் அதிபர் தேர்தல் பற்றியும் சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக் கைகள் பற்றியும் இன்னொரு தவறான செய்தியை அவர் வெளி யிட்டார்,” என்று திரு மேனன் கூறினார்.

மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால மேனன். படம்: வெளியுறவு அமைச்சு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon