சுடச் சுடச் செய்திகள்

போதைப்பொருள்: மணிலாவில் 25 பேர் சுட்டுக்கொலை

மணிலா: பிலிப்பீன்சில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போலிசார் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசை யில் மணிலாவில் ஒரே இரவில் போதைப்பொருள் சந்தேக நபர்கள் 25 பேர் கொல்லப் பட்டதாக போலிசார் கூறினர். போதைப்பொருள் கடத்தல் காரர்களை ஒடுக்குவதற்கு திங்கட்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். அந்த சோதனைகளின்போது 32 பேர் கொல்லப்பட்டதாகவும் 109 பேர் கைது செய்யப் பட்டதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் 200 கிராம் போதைப் பொருள், 785 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கிகளை போலிசார் கைப்பற்றினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon