தென்கொரியாவின் அனுமதி பெற அமெரிக்கா உறுதி

சோல்: வடகொரியா மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பு தென்கொரியாவின் அனுமதியைப் பெற அமெரிக்கா உறுதி அளித் துள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறினார். “எங்களின் அனுமதி இல்லாமல் கொரிய தீபகற்பத்தில் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து யாரும் முடிவு எடுக்க முடியாது,” என்று திரு மூன் கூறினார். வடகொரியா மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பு தென் கொரியாவுடன் அதுகுறித்து ஆலோசிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதி அளித் திருப்பதாக திரு மூன் கூறினார்.

அமெரிக்காவின் குவாம் தீவைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக வடகொரியா அறிவித்தது முதல் பதற்றம் நிலவுகிறது. வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து திரு டிரம்ப், அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத் தினால் இதுவரை உலகம் எதிர்பார்க்காத விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவுக்கு மிரட்டல் விடுத்தார். வடகொரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற அச்சமும் நிலவியது. வடகொரியாவை திரு டிரம்ப் கடுமையாகச் சாடியபோதிலும் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அவர் நோக் கம் கொண்டிருக்கவில்லை என் பதையே அவரது கூற்று உணர்த் துகிறது என்று திரு மூன் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon