சுடச் சுடச் செய்திகள்

நஜிப்: மலாய் சமூகத்தின் வளர்ச்சிக்கு S$4 பில்லியன் திட்டம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பூமிபுத்ரா என்று அழைக்கப்படும் மலாய் இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்காக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் 15 பில்லியன் ரிங்கிட் (4.8 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) வளர்ச்சித் திட்டத்தை அறிவித்திருக்கிறார். பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் வேளையில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் திரு நஜிப் ஒப்புக்கொண்ட ஆதரவு திட்டத்தை அவர் இப்போது அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் நடக்கவேண்டிய எதிர்வரும் தேர்தல், திரு நஜிப்பின் மிகக் கடினமான தேர்தல் என நம்பப்படுகிறது. பல பில்லியன் டாலர் நிதி தொடர்பான ஊழல், உயர்ந்து வரும் வாழ்க்கை செலவுகள், மதியுரைஞராக இருந்து இப்போது எதிர் தரப்பில் சவால் விடும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது என பல முனைகளில் நஜிப்புக்கு எதிர்வரும் தேர்தல் கஷ்டமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘1 மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் மலேசியாவின் பெரும்பான்மை யினரான மலாய்க்காரர்களின் நிறுவனத்திற்கு திரு நஜிப் 15 பில்லியன் ரிங்கிட் நிதி வழங்கி யுள்ளார். சமூகத்தின் குறிப்பிட்ட அந்த வர்க்கத்தினர் பொருளியல் வளர்ச்சியடைய மேற் கொள் ளப்படும் நோக்கில் அந்த திட்டம் வழங்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon