‘ராஜ’ அம்சங்களுடன் தீபாவளி கொண்டாட்டங்கள்

ராஜா, ராணி வேடங்களில் கைபேசி செயலி மூலம் புகைப்படம் எடுத்துகொள் வது போன்ற புதிய அம்சங்களை இந்த ஆண்டின் லிட்டில் இந்தியா தீபாவளி கொண்டாட்டங்களில் எதிர்பார்க்கலாம். அரச மாளிகை, ராஜ யானைகள், நடன உற்சவம் என பழங்கால மன்னர் காலத்தை கருப்பொருளாகக் கொண்டு இருக்கிறது இவ்வாண்டின் லிட்டில் இந்தியா தீபாவளிக் கொண்டாட்டங்கள். அடுத்த மாதம் 2ஆம் தேதி தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சியுடன் லிட்டில் இந்தியாவில் பண்டிகை குதூகலம் களைகட்டவிருக்கிறது. அன்றிரவு ரேஸ் கோர்ஸ் சாலையில் கண்கவர் உற்சவ ஊர்வலம் நடக்கவுள்ளது. அதில் உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 19 கலைக்குழுக்களின் ஆடல், பாடல் படைப்புகளைப் பொது மக்கள் கண்டுகளிக்கலாம்.

“இதனைப் பிரபல ‘சிங்கே’ ஊர் வலத்துடன் ஒப்பிடலாம்,” என்றார் இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலை வரும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) தலை வருமான திரு ராஜ்குமார் சந்திரா. செப்டம்பர் 2ஆம் தேதியிலிருந்து ஒரு முழுமையான பண்டிகை அனுப வத்தைப் பெறும் வகையில் லிஷா பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளிச் சந்தை, தீபாவளி கலைக் கண்காட்சி, தஞ்சாவூர் ஓவியம் தீட்டு தல், பூமாலை கட்டுதல், ரங்கோலி கோலமிடுதல், பாரம்பரிய இந்திய இசை தொடர்பான பயிலரங்குகள், தீபாவளிக்கு முதல் நாளில் கூட்டாகச் சேர்ந்து மாவிளக்கு தீபம் ஏற்றுதல் போன்றவை அவற்றுள் அடங்கும். மேல் விவரங் களுக்கு ‘லிஷா’ இணையத்தளத்தை நாடலாம்.

வேப்பம்பசை, சுண்ணாம்புத்தூள், மரப்பலகை, பருத்தித் துணி என முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு ‘தஞ்சாவூர் பலகைப்பட’ ஓவியங்களைப் படைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த காவியா ஜெகதீசன், 29. படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்