தனிமைப்படுத்தப்படும் டிரம்ப்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஏறக்குறைய 200 நாட்களே ஆகியுள்ள நிலையில் டோனல்ட் டிரம்ப்புக்கு நாளுக்கு நாள் ஆதரவு குறைந்து வரு கிறது. வெர்ஜீனியா மாநிலம், சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இன தேசியவாதி களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்த வர்த்தகத் தலைவர்களும் அர சியல்வாதிகளும் அவரைவிட்டு ஓட்டம் பிடிப்பது தொடர்கிறது. இதனால் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் டிரம்ப். இதைச் சமாளிக்கும்விதமாக, வெள்ளை மாளிகையின் இரு வர்த்தகக் குழுக்கள் கலைக்கப்படுவதாக டுவிட்டர் மூலம் டிரம்ப் அறிவித்துள்ளார். “உற்பத்தி மன்றம், உத்தி மற்றும் கொள்கை மன்றம் ஆகிய வர்த்தகக் குழுக்களில் இடம்பெற்றுள்ள வர்த்தகத் தலைவர்களுக்கு அழுத்தம் தருவதற்குப் பதிலாக, அவ்விரு குழுக்களையும் கலைத்துவிடுகிறேன். அனைவருக்கும் நன்றி,” என்று டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை சார்லட்ஸ்வில் நகரில் ராபர்ட் இ லீ எனும் கூட்டாட்சித் தலைவரின் சிலையை அகற்றக் கோரி வலதுசாரி வெள்ளை இன தேசியவாதி கள் பேரணி நடத்தினர். அதற்கு இன் னொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவிக்க, அவர்களுக்குள் மோதல் வெடித்தது. அப்போது வலதுசாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட்டத்திற்குள் காரைச் செலுத்த, பெண் ஒருவர் பலியானார்; மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, தொடக் கத்தில் இனவெறி, வன்முறைக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்த டிரம்ப், பின்னர் வன்முறைக்கு இரு பிரிவினரும் காரணம் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறார். அவரது இக்கருத்து அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இதையடுத்து, வெள்ளை மாளிகை பொருளியல் ஆலோசனைக் குழுக் களில் இடம்பெற்றிருந்த மூத்த வர்த்தக நிர்வாகிகள் அக்குழுக்களைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.