சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கம்

கோலாலம்பூர்: ஒத்திசைவு நீச்சல் வீராங்கனை டெபி சோ தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டி களில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 19 வயது டெபி சோ 75.0000 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். 73.0333 புள்ளிகளைப் பெற்ற மற்றொரு சிங்கப்பூர் வீராங்கனை யான மியா யோங் வெண்கலப் பதக்கம் வென்றார். மலேசிய வீராங்கனை 74.7000 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக் கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக, சிங்கப்பூரின் பதக்க வேட்டையை வெள்ளிப் பதக்கத்துடன் தொடங்கி வைத் தனர் அம்பெய்தல் வீரர்கள். அம்பெய்தல் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் மலே சியக் குழுவோடு இறுதிப் போட்டி யில் மோதியது சிங்கப்பூர் ஆடவர் குழு. இதில் 222=228 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவிய சிங்கப்பூர் வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பிரதமர் வாழ்த்து இதற்கிடையே, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங் கேற்கும் சிங்கப்பூர் வீரர்கள் வெற்றிகளைக் குவித்து பதக்கங் களை அள்ள பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒத்திசைவு நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை டெபி சோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்