சுடச் சுடச் செய்திகள்

பார்சிலோனா குழுவை பந்தாடியது ரியால் மட்ரிட்

மட்ரிட்: ஸ்பானிய காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட் யூஃபா சூப்பர் கிண்ணத்தைத் தொடர்ந்து ஸ்பானிய சூப்பர் கிண்ணத்தையும் வென்றுள்ளது. ஸ்பானிய சூப்பர் கிண்ண இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பார்சிலோனாவை தனது சொந்த மண்ணில் நேற்று அதிகாலை எதிர்கொண்டது ரியால் மட்ரிட். முதல் சுற்று ஆட்டத்தில் மட்ரிட் குழுவிற்காக கோலடித்த மார்க்கோ அசென்சியோ, நேற் றைய ஆட்டத்திலும் புகுத்திய கோல்தான் அக்குழுவை முன் னிலை பெறச் செய்தது. அடுத்து மார்செலோ கொடுத்த பந்தை கரிம் பென்சிமா கோலாக மாற்ற, மட்ரிட் குழுவின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந் தது. கடைசி வரை பார்சிலோனா கோல் எதுவும் போடாத நிலையில் போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ரியால், ஒட்டு மொத்த கோல் கணக்கிலும் 5-=1 என முன்னிலை பெற்று கிண் ணத்தைக் கைப்பற்றியது. லா லீகா போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் இஸ்கோ, கேரத் பேல் இருவருக்கும் நேற்றைய ஆட்டத் தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக ரொனால்டோவும் விளையாடவில்லை. இந்நிலையில், மட்ரிட்டின் இந்த வெற்றியானது இனிவரும் போட்டிகளில் அக் குழுவை வெல்வது கடினமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் ரியால் மட்ரிட் குழுவிற்கான முதல் கோலைப் புகுத்திய மகிழ்ச்சியை சக வீரர் லூக்கா மோட்ரிச்சுடன் (இடது) பகிர்ந்துகொள்ளும் மார்க்கோ அசென்சியோ. படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon