துரைமுருகன்: விவசாயிகளைத் திரும்பிக்கூட பார்க்காத அரசு

காஞ்சிபுரம்: விவசாயிகளைப் பற்றி தமிழக அரசு சிறிதும் கவலைப்படவில்லை என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு, மாநில விவசாயிகளை திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை என காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். ”ஓபிஎஸ், எடப்பாடி இணைவார்கள், தினகரன் கரை சேர்வாரா? என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இவர்கள் என்ன தாயம் விளையாடுகிறார்களா? இதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?

“3 அணிகளாக உள்ள அதிமுக, அடுத்து நான்கைந்து அணிகளாகவும் பிரியக்கூடும். நடிகர் கமல் டிவிட்டரில் என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனாலும் திமுக மழுங்கிப் போன கத்தி அல்ல, பட்டை தீட்டப்பட்ட கூர்மையான கத்தி, பாறாங்கல்லிலும் பாயும்,” என்றார் துரைமுருகன்.

Loading...
Load next