மிரட்டும் தினகரன்: அரசுக்கு புது நெருக்கடி

சென்னை: தனக்கு எதிராக அணி சேர்ந்துள்ள அமைச்சர்கள் மீது டிடிவி தினகரன் கடும் அதிருப்தி யில் உள்ளார். இந்நிலையில், அவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களை நேரடியாக மிரட்டத் துவங்கியுள்ளதாக தமி ழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழ் நிலையில், அதிமுகவின் மூன்று அணிகளுமே கட்சி எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுப்பதில் முனைப் பாக உள்ளன. இதனால் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருது கின்றனர். சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாஜக மேலிட ஆசியோடு முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைவது கிட்டத்தட்ட உறுதி யாகி உள்ளது. இந்நிலையில், தன்னை எதிர்க்கும் அமைச்சர்களுக்கு தினகரன் மிரட்டல் விடுத்து வரு வதாகப் பரபரப்புத் தகவல் வெளி யாகி உள்ளது. குறிப்பாக அவர் மூன்று அமைச்சர்களை குறி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ராதாகிருஷ்ணன், ராஜு, விஜய பாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், உதயக்குமார் உள்ளிட்டோர் முன்பு தினகரனை வெளிப்படையாக ஆதரித்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட மேலூரில் தினகரன் தரப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்களில் திண்டுக்கல் சீனி வாசனும் உதயக்குமாரும் முதல்வர் தரப்புடன் சேருவார்கள் என தினகரன் தரப்பு சற்றும் எதிர் பார்க்கவில்லை எனக் கூறப்படு கிறது. ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதும், இவர்கள் இருவருக் குமே முக்கியத்துவம் அளித்தார் சசிகலா. ஆனால் இருவரும் விசுவாசமின்றிச் செயல்படுவதாகக் கருதும் தினகரன் இவர்களையும், தனக்கு எதிராகப் பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமாரையும் குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து இம்மூவர் தவிர, மேலும் சில அமைச்சர்கள் தொடர் பான சில முக்கிய புகைப்படங்கள், தகவல்களை வெளியிடுவோம் என தினகரன் தரப்பு மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அமைச்சர்களை தங்கள் பக்கம் வரவழைத்து அர சுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதே அவர் திட்டம் என தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி (இடக்கோடி) பதவியேற்கயுள்ள தாகக் கூறப்படும் நிலையில், திருப்பதி ஏழுமலையான கோவில் அர்ச்சகர்கள் அவரைச் சந்தித்து ஆசி வழங்கினர். படம்: இணையம்

26 May 2019

ஜெகன்மோகன்: ஆண்டவன் தண்டனை கொடுத்துவிட்டார்

கட்டடத்தின் மாடிகளில் மூண்ட தீயைக் கட்டுப்படுத்த 19 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. படம்: இணையம்

26 May 2019

சூரத்: பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாப பலி