அருள்நிதியின் புதுக்கூட்டணி

‘பிருந்தாவனம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. அதன் பின்னர் கரு.பழனியப்பன் இயக்கத் தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தமிழகத்தின் நடப்பு அரசியலின் போக்கை அலசும் படமாக உருவாக உள்ளதாம். கதையைக் கேட்ட அருள்நிதி, வெகுவாக ஈர்க்கப்பட்டு உடனே நடிக்க சம்மதித்தாராம். தனது படங்களின் வழி சொல்ல நினைக்கும் கருத்துக்களை, எந்த வித சமரசங்களும் இன்றி ஆணித் தரமாக முன்வைப்பவர் கரு.பழனியப் பன். மேலும் சமூக, அரசியல் நடப்பு களை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். இதனால் இளையர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு உள்ளது. இந் நிலையில் அவருடன் கூட்டணி அமைத்துள்ளார் அருள்நிதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon