சுடச் சுடச் செய்திகள்

மாணவர்களுக்குப் புதிதாக இரண்டு விருதுகள் அறிமுகம்

மாணவர்களிடம் மீட்சித்திறனை யும் கடும் உழைப்பையும் மறுஉறு திப்படுத்துவதற்காகவும் விவேக நகர் இலக்கைச் சாதிக்க உதவும் திட்டங்களை முன்வைத்திருக்கும் தொழில் படிப்பு மாணவர்களை அங்கீகரிக்கவும் இந்த ஆண்டில் புதிதாக இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ‘லீ குவான் இயூ தனிச்சிறப்பு மாணவர் விருது’ என்ற ஒரு விருது, அரசாங்க நிதி உதவி பெறும் 20 சிறப்பு கல்வி பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த மாணவர் களின் மீட்சித்திறனையும், கடும் பணியையும் அங்கீகரிக்கிறது. இந்த மாணவர்கள் தங்க ளுடைய பிரச்சினைகளை எல்லாம் கடந்து மற்றவர்கள் பின்பற்ற முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்பதை நேற்றைய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யீ காங் சுட்டினார்.

‘லீ சியன் லூங் இரு வழி மின்னிலக்க ஊடக அறிவார்ந்த தேசம் விருது’ என்ற மற்றொரு விருது அறிவார்ந்த தேசத்தை இலக்கை சாதிப்பதற்கு உதவும் திட்டங்களை முன்வைத்துள்ள முழுநேர பலதுறை தொழில் படிப்பு மாணவர்களை அங்கீகரிக்கிறது. இந்த விருதுகளையும் சேர்த்து நேற்று 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருதுகள் பெற்றனர். இந்த விருதுகள் நம்முடைய பல பள்ளிக்கூடங்களையும் தொழிற்கல்வி நிலையங்களையும் சேர்ந்த மாணவர்களின் பரந்த, பலதரப்பட்ட சாதனைகளையும் தனி குணநலன்களையும் அவர் கள் ஆற்றும் தொண்டுகளையும் அங்கீகரித்துப் பாராட்டுவதாகவும் திரு ஓங் கூறினார். பிரதமர் லீ சியன் லூங்கும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவும் அளித்திருக்கும் சொந்த நன்கொடைகள் மூலம் இந்த பல்வேறு விருதுகள் வழங் கப்படுவதாக அமைச்சர் கூறினார். சமூகத்திற்குத் திருப்பித் தொண்டாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எதிர்கால தலைமுறைகளைப் பேணி உரு வாக்க வேண்டியதன் முக்கியத்து வத்தையும் இந்த நன்கொடை நமக்கு நினைவூட்டுவதாக அமைச் சர் கூறினார். லீ குவான் இயூ தனிச்சிறப்பு மாணவர் விருதை நேற்றைய நிகழ்ச்சியில் 25 பேர் பெற்றனர். அவர்களில் ஒரு ஜோடி இரட்டையரும் அடங்குவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon