வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களைப் பயன்படுத்தியே தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸ் நகரான நைஸில் கூட்டத்திற்குள் வேன் புகுத்தப்பட்டதில் 86 பேர் மாண்டனர். கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் சந்தைக் கூட்டத்திற் குள் லாரியைப் புகுத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாண்டு மார்ச் 22ஆம் தேதி லண்டன் நகரின் கூட்டத்திற்குள் காரை புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் மாண்டனர். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் லாரி மூலம் ஐவர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜூன் 3, 19 ஆகிய தேதி களில் லண்டன் நகரில் வேன் மூலம் நடத்தப்பட்ட வெவ்வேறு தாக்குதல்களில் ஐவர் மாண்டனர். நேற்று முன்தினம் நிகழ்ந்த பார்சிலோனா தாக்குதலிலும் வேன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 14 பேர் மாண்டதோடு நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர்.

Loading...
Load next