பார்சிலோனா: தாக்குதல் பின்னணியில் எண்மர் அடங்கிய குழு

பார்சிலோனாவில் வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக் குதலை எட்டுப் பேர் கொண்ட குழு நடத்தி இருக்கலாம் என ஸ்பெயின் அதிகாரிகள் நம்புவ தாகவும் பியூட்டேன் வாயுக் குப்பி களைப் பயன்படுத்த அந்தக் குழு திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணை மேற்கொண்ட சட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்த னர். தாக்குதல்காரர்கள் வாயுக் குப்பிகளைப் பயன்படுத்தி தாக் குதல் நடத்துவதற்கான சாத்தி யம் இருந்ததாக கெட்டலான் அர சாங்க அதிகாரி ஜோக்கிம் ஃபார்ன் நேற்றுக் காலை உள்ளூர் வானொலியில் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு லாஸ் ராம்ப்லாஸ் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந் திருந்த வீதியில் சந்தேக நபர் ஒருவன் வேனை புகுத்தியதால் 14 பேர் மாண்டனர், நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். முன் னதாக மரண எண்ணிக்கை 13 ஆக இருந்தது.

அடுத்த சில மணி நேரங் களில் தெற்கு பார்சிலோனாவின் கடலோர உல்லாச நகரான கேம்ப்ரிலில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலை முறி யடித்த போலிசார் ஐந்து தாக்கு தல்காரர்களைச் சுட்டுக் கொன்ற னர். தாக்குதல் மேற்கொண்டவர் களை அடையாளம் காண்பதே இப்போதைக்கு தலையாய பணி என்று தெரிவித்த திரு ஃபார்ன், வேனை செலுத்தியவருக்கும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியவர்களுக்கும் இடையில் என்ன உறவு என்பதைக் கண் டறிய வேண்டியுள்ளது என்றார்.

கேம்ப்ரில் நகரில் நடைபெற்ற இரண்டாவது சம்பவத்தில் பொதுமக்களில் அறுவரும் ஒரு போலிஸ் அதிகாரியும் கடுமை யாகக் காயமுற்றனர். வெ டி பொ ரு ட் க ளு ட ன் இணைக்கப்பட்ட இடைவாரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்கும் ராம்ப் லாஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக போலிசார் நம்புகின் றனர். பொதுமக்களின் கூட்டத்திற் குள் புகுந்த வேன் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்ததாகவும் அதனை ஓட்டிச் சென்றவன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்கள் கூறினர். போராளிக் குழுவைச் சேர்ந்தவனாக அவன் இருக் கலாம் என போலிசார் சந்தேகிக் கின்றனர்.

லாஸ் ராம்ப்லாஸ் நகரில் மாண்டோருக்கு மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் அஞ்சலி செலுத்தப் பட்டது. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon