ரயில் பயண தாமதம்: மாணவர்களுக்கு கல்வி அமைச்சு உறுதி

ரயில் பயண தாமதத்தால் தேர் வுக்குச் செல்வதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய ஏற்பாடு கள் செய்யப்படும் என்று கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளது. கூடுதல் பயண நேரம் தேவைப் பட்டதால் ‘ஓ’ நிலை மற்றும் தொடக்கநிலை வாய்மொழித் தேர் வுக்குச் சில மாணவர்கள் தாமத மாகச் செல்ல நேரிட்டது. சமிக்ஞை கோளாறு காரணமாக நேற்றுக் காலை வடக்கு-=தெற்கு வழித்தடத் தில் மூன்று மணி நேரமும் டௌன்டவுன் வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரமும் ரயில்கள் தாம தமாகச் சென்றன. டெளன்டவுன் வழித்தடம் முற் றிலும் ரயில் சேவை இல்லை என காலை 6.25 மணிக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது. பின்னர் 7 மணியளவில் சேவை கள் வழக்கநிலைக்குத் திரும்பின. இருந்தாலும் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கக்கூடும் என்று நிறுவனம் எச்சரித்திருந்தது.

வடக்கு=தெற்கு வழித்தடத் தின் ஒரு பகுதி, அங் மோ கியோ நிலையம் அருகே சமிக்ஞை கோளாறு காரணமாக காலை 6.30 மணிக்குப் பாதிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் குறைபாட்டைச் சரிப்படுத்த கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆனது. காலை 9.20 மணிக்கு சேவைகள் முற்றிலும் வழக்கநிலைக்குத் திரும்பின. உச்சநேரத்தில் அடுத்தடுத்த நாள் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வியாழக்கிழமை மாலை யிலும் வடக்கு=தெற்கு வழித் தடத்தில் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை தாமதம் ஏற்பட்டது. கல்வி அமைச்சு நேற்றுக்காலை 9.36 மணிக்கு தனது ‘ஃபேஸ்புக்’ கில் ஒரு பதிவை வெளியிட்டது. வாய்மொழித் தேர்வுக்கான தொடக்கநிலை 6 மாணவர்கள் பள்ளிக்கு வரத் தாமதம் எற்படின் அவர்கள் கவலைகொள்ளத் தேவை யில்லை என்று அந்தப் பதிவில் அமைச்சு தெரிவித்திருந்தது. தாமதத்திற்காக எம்ஆர்டி நிலையத்தில் பொறுத்தருளும் கடி தம் பெறத் தேவையில்லை என்றும் அவரவரின் பள்ளிக்குத் தகவல் தெரிவித்தாலே போதும் என்றும் கூறிய அமைச்சு, தேவைப்படின் பின்னொரு நேரத்தில் அவர்கள் தேர்வைப் பூர்த்தி செய்யலாம் என் றது.

காலை 8.30 மணியளவில் பீஷான் எம்ஆர்டி நிலையத்தில் தேங்கி இருந்த பயணிகள் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next