தனியாகக் கிடந்த பை ஏற்படுத்திய அச்சம்

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ராஃபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டரில் இருக்கும் டாக்சி நிலையம் ஒன்றில் வியாழக் கிழமை பிற்பகல் 4.27 மணிக்கு கேட்பாரற்று ஒரு பை கிடந்ததையடுத்து 1 மணி நேரம் அந்த இடத்தைப் போலிஸ் சுற்றி வளைத்தது. எண் 252 நார்த் பிரிட்ஜ் ரோடு முகவரியில் ஒரு பை கிடப்பதாக வியாழக்கிழமை பிற்பகல் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது. பையைச் சோதித்தபோது அதில் குழந்தைகள் உடைகள் இருந்ததைப் பார்த்ததாக போலிஸ் தெரிவித்தது.