கட்டுமான நிறுவனத்திற்கு $156,000 அபராதம்

எலி நடமாட்டம் மிகுந்த அசுத்தமான இடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் 60 பேரை தங்க வைத்திருந்ததற்காக கே லிம் கன்ஸ்ட்ரக்ஷன் & டிரேடிங் என்ற நிறுவனத்திற்கு $156,000 அப ராதம் விதிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தக்கூடாது என்று அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கே லிம் நிறுவனமும் இதர ஒன்பது நிறுவனங்களும் அந்த ஊழியர் களை வேலையில் அமர்த்தின. காமன்வெல்த் அவென்யூ அருகிலும் கிம் மோ லிங்கிலும் உள்ள கட்டுமான இடம் ஒன்றில் தற்காலிகமான குடியிருப்பில் அந்த ஊழியர்கள் தங்கவைக்கப் பட்டு இருந்தனர். அந்த ஊழியர்கள் தங்கி யிருந்த இடம் படுமோசமாக இருந்தது என்றும் அங்கே எலித் தொல்லைகள் அதிகமாக காணப் பட்டதாகவும் அறிக்கை ஒன்றில் மனிதவள அமைச்சு நேற்று தெரி வித்தது. ஊழியர் வேலை அனுமதி நிபந்தனைகளை மீறுகின்ற முத லாளிகள் மீது வழக்கு தொடுக்கப் படும். ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் அவர்களுக்கு $10,000 வரை அபராதம் மற்றும் அல்லது 12 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கமுடியும் என்று அமைச்சு எச்சரித்தது.

Loading...
Load next