கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு

டெக் வை கிரசெண்டில் ஒருவரைக் கொலை செய்ததாக 48 வயது ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. அங்கு புளோக் 165 ஏ-யில் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கும் 4.33 மணிக்கும் இடையில் முகம்மது ரோஸ்லான் சைனி, 35, என்பவரைக் கொலை செய்திருப்பதாக முகம்மது ரோஸ்லி அப்துல் ரஹ்மான் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. திரு ரோஸ்லான் நெஞ்சில் குத்து காயங்களுடன் புளோக்கின் அடித்தளத்தில் அசைவின்றி கிடந்ததாக முன்னதாக வெளியான தகவல்கள் தெரிவித்தன. இப்பொழுது ரோஸ்லி மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் இம்மாதம் 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். குற்றவாளி என்று தீர்ப்பானால் ரோஸ்லிக்கு மரணதண்டனை விதிக்கப்படக்கூடும்.

முகம்மது ரோஸ்லி அப்துல் ரஹ்மான் (சிவப்பு உடை) மீது குற்றம் சுமத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்