அதிகாரிகள் சோதனை: 96 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நாடு முழுவதும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை எடுத்த நான்கு நாள் நடவடிக்கையில் மொத்தம் 96 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். 100 கிராம் ஹெராயின், 40 கிராம் ஐஸ், 25 கிராம் கஞ்சா, எரிமின்5 மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்கிறது என்று இந்தப் பிரிவு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு போலிஸ் படை உதவி செய்தது. பூன் லே, புக்கிட் பாத்தோக், கேலாங், தோ பாயோ உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடந்தது.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவரைப் பிடித்துச் செல்கிறார்கள். படம்: போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு