காது கேளாதோருக்கு செவிசாய்க்கும் அர்ஜுன் வத்ரேவு

வில்சன் சைலஸ்

சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு களைக் கண்டறிவதுடன் பொது மக்களுக்குச் சேவையாற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள 21 வயது அர்ஜுன் வத்ரேவு, எதிர் காலத்திலும் இதில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்பு அளித்துள்ளது வெளியுறவு அமைச்சின் உபகாரச் சம்பளம். பொதுச் சேவை ஆணையத் துடன் இணைந்து வெளியுறவு அமைச்சு நேற்று வழங்கிய உபகாரச் சம்பளம் பெற்ற எட்டு பேரில் அர்ஜுனும் ஒருவர். வெளிநாட்டுச் சேவைகளுக் கான சிங்கப்பூர் அரசின் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற இவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளை ராஃபிள்ஸ் உயர் நிலைப்பள்ளி, ராஃபிள்ஸ் தொடக் கக் கல்லூரி ஏற்படுத்திக் கொடுத் தன.

இதன் மூலம், சிங்கப்பூர் உட் பட இதர நாடுகளையும் பாதிக்கும் பொதுவான சமூகப் பிரச்சினை களுடன் அதன் பின்னணியையும் அறிந்து வந்த அர்ஜுன், அதற்கான தீர்வுகள் குறித்தும் அறிய விரும் பினார். இது தொடர்பான பணியை எதிர்காலத்திலும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடக்கக் கல் லூரி முடித்து 2015ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சில் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக இணைந்த அர்ஜுன், எதிர்காலப் பணி குறித்த தெளிவான முடிவெ டுக்க அந்த அனுபவம் கைகொடுத் தது என்றார்.

“இரண்டு வாரமாக இருந்தாலும் வெளியுறவு அமைச்சில் பல தக வல்களைக் கற்றுக்கொண்டேன்,” என்ற அவர், தேசிய சேவையில் இருக்கும்போதே வெளியுறவு அமைச்சின் உபகாரச் சம்பளத் துக்கு விண்ணப்பித்தார்.

இவ்வாண்டு வெளியுறவு சேவைக்கான உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர்களில் ஒருவரான திரு அர்ஜுன் வத்ரேவு (இடது) வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிட மிருந்து அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்கிறார். படம்: வெளியுறவு அமைச்சு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆள் நடமாட்டமற்ற டர்ஃப் கிளப் அவென்யூவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் புத்த சிலையின்மீது தங்கத் தகடுகள் வைத்து பலரும் வழிபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

நிம்மதி நல்கும் விசாக தினம்