ஆரம்பகால தாய்மொழிக் கல்வி ஆசிரியர்களுக்கு விருதுகள்

சுதாஸகி ராமன்

‘ஜிசிஇ’ சாதாரண நிலைத் தேர்வு களுக்குப் பின்னர் ஆரம்பகாலக் கல்வித் துறையில் பட்டயக் கல்வி மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர் வத்தில் பலதுறைத் தொழிற்கல் லூரிக்கு விண்ணப்பித்தார் குமாரி ஜூலியானா ஜெயஸ்ரீ. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தாதிமைக் கல்வியில் பட்டயக் கல்வித் துறை யில் பயில அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓராண்டு காலம் பயின்ற அவர், மீண்டும் ஆரம்பகாலக் கல்வி துறையில் பட்டயப் படிப்புப் பயில இரண்டாம் முறையாக விண்ணப்பித்தார். மீண்டும் அவர் ஏற்றுக்கொள் ளப்படவில்லை. மனமுடைந்து போன அவர், பாலர் பள்ளி ஒன் றில் துணை ஆசிரியராகச் சேர்ந்து ஆரம்பக்காலக் கல்வியில் நேரடி யாக அனுபவம் பெறத் தொடங்கி னார். விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் பலனாக அத்து றையில் முன்னேறியிருக்கும் 24 வயது ஜூலியானா, இன்று தலை சிறந்த தாய்மொழிக்கான ஆரம்ப காலக் கல்வி ஆசிரியர் விருதைப் பெறுகிறார்.

 

மாணவர்கள் விரும்பும் கதைகள், பாடல்கள் மூலம் தமிழ்மொழியைச் சுவாரசியமாகக் கற்றுகொடுக்கும் ஜூலியானா ஜெயஸ்ரீ. படம்: திமத்தி டேவிட்