சுடச் சுடச் செய்திகள்

ஆறாவது தாய்மொழிகளின் கருத்தரங்கு

ஆறாவது ஆண்டாக இன்று நடைபெறும் தாய்மொழிகளின் கருத்தரங்கில் சிங்கப்பூர் பள்ளி களும் சமூகமும் ஒன்றிணைந்து, தாய் மொழி கற்றலை மேம்படுத் தும் ஒன்றுபட்ட முயற்சிகளையும் நிகழ்ச்சிகள் மூலம் அனைவரது ஈடுபாட்டையும் பகிர்ந்துகொள் ளும். கல்வி அமைச்சும் தாய்மொ ழிக் கற்றல் வளர்ச்சிக் குழுக்க ளும் இணைந்து ஏற்பாடு செய் யும் தாய்மொழிகளின் கருத்த ரங்கு இன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை சன் டெக் சிட்டி மாநாட்டு, கண் காட்சி மையத்தில் நடைபெறும். ‘நம் மொழிகளின் அதிசய உலகில் திளைத்திருப்போம்’ எனும் இவ்வாண்டு கருப்பொரு ளுக்கு ஏற்ப, பிள்ளைகள், பெற் றோர்கள் மத்தியில் அதிவேக, அனுபவமிக்க அணுகுமுறை மூலம் தாய்மொழிக் கற்றலை உயர்ப்பிப்பதைக் கருத்தரங்கு மையமாகக் கொண்டிருக்கும். நமது பிள்ளைகளைத் துடிப் பான மாணவர்களாகவும் தாய் மொழியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவோராகவும் உரு வாக்க பாலர் பள்ளிகள், பள்ளி கள், சமூகம் ஆகியவற்றுக்கி டையே வலுவான உறவை ஏற் படுத்த முயற்சி மேற்கொள்ளப் படும்.

இன்றைய கருத்தரங்கில் 30 பகிர்வு நிகழ்ச்சிகளும் பயிலரங் குகளும் நடைபெறும். அத்துடன் பாலர் பள்ளிகள், பள்ளிகள், பல்வேறு பங்காளித்துவ அமைப் புகள் அமைத்துள்ள 43 காட்சிக் கூடங்களும் உண்டு. இந்தக் காட்சிக் கூடங்களில் புத்தாக்க கற்றல்முறைகள், நமது பிள்ளை களைத் துடிப்பான மாணவர்களா கவும் தாய்மொழியை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவோராக வும் உருவாக்கக்கூடிய சமூக நிகழ்ச்சிகள் பற்றி விளக்கப் படும். முற்றிலும் இலவசமாக நடத் தப்படும் தாய்மொழிகளின் கருத்தரங்கில் பெற்றோர்களும் மாணவர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ள கல்வி அமைச்சும் தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon