எவர்ட்டன் வெற்றி

லிவர்பூல்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடருக்கு முந்தைய ‘பிளே ஆஃப்’ ஆட்டத்தின் முதல் சுற்றில் ஹைதுத் ஸ்பிலிட் அணியை 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எவர்ட்டன். 30வது நிமிடத்தில் மைக்கல் கீன் (படம்) புகுத்திய கோலால் எவர்ட்டன் முன்னிலை பெற, ஹைதுத் குழு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் 33வது நிமிடத்தில் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங் கிய சில நிமிடங்களிலேயே எவர்ட்டன் மேலும் ஒரு கோலை போட, வலுவான நிலையை எட்டியது அக்குழு. இதற்கிடையே, எதிரணி போட முயன்ற மூன்று கோல் களையும் எவர்ட்டனின் புதிய கோல் காப்பாளரான ஜோர்டன் பிக்ஃபோர்ட் தடுத்துவிட்டார்.

ஆனாலும் பிற்பாதி ஆட்டத் தில் மேலும் சில கோல்களைப் போட்டிருக்கக்கூடிய வாய்ப்பைத் தனது வீரர்கள் தவறவிட்டது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார் எவர்ட்டன் நிர்வாகி ரொனால்ட் கோமன். வரும் வியாழக்கிழமை அன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் எதிரணி மண்ணில் விளையாட வுள்ளது எவர்ட்டன். இப்போட்டியில் வெற்றி பெற வில்லை என்றாலும் சமநிலை கண்டாலே, யூரோப்பா லீக் குழு நிலைப் போட்டிக்கு எவர்ட்டன் தகுதி பெற்றுவிடும்.

Loading...
Load next