கவர்ச்சி ஒத்துவராது என்கிறார் நந்திதா

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிடுபவர், ரசிகர்கள் மனதில் இத்தகைய எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கா கவே நாகரிகப் பெண்ணாகவும் நடிப்பதாகச் சொல்கிறார். “அதற்காக கதையே இல்லாத படங்களில் கவர்ச்சிகரமான வேடங்களை ஏற்று நடிப்ப தெல்லாம் எனக்கு ஒத்துவராது. நாம் திரையில் தோன்றுவது பத்து நிமிடக் காட்சியாக இருந்தாலும் ரசிகர்கள் இருக்கையில் உட்கார்ந்து, தயக்கமின்றி அதைப் பார்க்க வேண்டும். “அதே போல், துணிச்சலான பெண்ணாகவும் நந்திதாவால் பிரதிபலிக்க முடியும் என்று இயக்குநர்களும் ரசிகர்களும் நினைக்க வேண்டும். “இதை மனதிற்கொண்டே திட்டமிட்டுச் செயல்படுகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் என்னை ரசிகர்கள் பார்க்க முடியும் என உத்தரவாதம் அளிக்கிறேன்,” என்கிறார் இளம் நாயகி நந்திதா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்