உண்மைக் காதல் தோற்காது - ஓவியா

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற ஆரவ் என்பவரை ஓவியா காதலிப்ப தாகத் தகவல் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் நெருங்கிப் பழகினர். எனினும் ஓவியா தன் காதலை வெளிப்படுத் தியபோது அதை ஏற்க மறுத்தார் ஆரவ். இதன் காரணமாகவே ஓவியாவுக்கு கடும் மன அழுத் தம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் உண்மையான காதல் என்றும் தோற்காது எனத் தற்போது வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஓவியா. “யாரும் என்னை நம்ப வேண்டாம்.. காதலை நம்புங்கள். ஒருவரைக் காதலித்துவிட்டுப் பின்னர் அவரை வெறுக்க வேண்டும் என்றால் என்னால் அது முடியாது. “என்னுடைய காதலில் நம்பிக்கை இருக் கிறது. ஏனெனில் உண்மையான காதல் தோற் காது. என் காதலை நான் கண்டிப்பாகத் திரும்பப் பெறுவேன்,” என்று காணொளிப் பதிவில் உருக்கத்துடன் கூறியுள்ளார் ஓவியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon