‘தெனாலிராமன்’ இரண்டாம் பாகம்

வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது இப்படம். இதன் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று அப்போதே கூறப்பட்டது. அதன் பின்னர் வடிவேலு நாயக னாக நடித்த படங்கள் பெரிதாக வர வேற்புப் பெறவில்லை. இதையடுத்து நகைச்சுவை வேடங்களிலும் நடிக்காம லேயே புறக்கணித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப் போதுதான் ஒன்றிரண்டு படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் தலைகாட்டத் தொடங்கி உள்ளார் வடிவேலு.

இந்நிலையில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யின் தயாரிப்பாளரான இயக்குநர் சங்கர், அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வர, இயக்கு நர் சிம்புதேவன் அதற்கான பணி களைத் துரித கதியில் மேற்கொண்டார். கதை விவாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள் என எல்லாம் தயா ராக உள்ளனவாம். எனினும் வடிவேலு விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருவதால் சில விஷயங்களைத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இரண்டாம் பாகத்தில், கதைப்படி வடி வேலு உடல் இளைத்திருக்க வேண்டுமாம். ஆனால் ‘மெர்சல்’ படத்தில் தற் போதுள்ள தோற்றத்திலேயே நடித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

இந்நிலையில் ஓரிரு தினங்களில் ‘மெர்சல்’ படப்பிடிப்பு முடிவுக்கு வரு கிறது. இதையடுத்து ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி- 2’க்காக கடும் உடற் பயிற்சி மேற்கொண்டு உடல் இளைக்க இருக்கிறாராம். தற்போது படப்பிடிப்புக்காக அரங்கு கள் அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. மேலும் வடிவேலுவுடன் நடிக்க இருப்பவர்களின் தேர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடிவேலு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

‘தெனாலிராமன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.