சுடச் சுடச் செய்திகள்

பழனியில் அரிய கற்சிலைகள்

பழனி: பழனி, புதுஆயக்குடி குமாரநாயக்கன் குளத்தின் தெற்குக் கரை அருகே வயல் வெளியில் சப்த கன்னியர் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. சப்த கன்னியர் தொகுப்புச்சிலையில் கடைசி 4 தெய்வங்களான வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ் வரி ஆகியவற்றை ஒரே பலகைக் கல்லில் வடிவமைத்துள்ளனர். சப்த கன்னிமார்களில் முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி போன்ற உருவங்கள் கிடைக்க வில்லை. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள சிலைகளுக்கு அருகே பாறையில் உளியால் செதுக்கிய சுவடுகள் தென்படுகின்றன. ஒரே கல்லில் 7 சிலைகளை வடிவமைக்கும்போது பலகை உடைந்து அதனால் சிலை செய்யும் பணி கைவிடப்பட்டிருக்கலாம் என் பது ஆய்வு மூலம் தெரியவருகிறது. பழனி ஆயக்குடி பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் கன்னிமுத்து, வாஞ்சிநாதன், பேரா சிரியர் அசோகன் ஆகியோர் தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். வடிவியல் கோட்பாடு மூலம் சப்த கன்னியர் சிலை 7ஆம் நூற்றாண்டு என்பதும் தெரிய வந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon