அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கூடலூரிலிருந்து திருப்பூரை நோக்கிச்சென்ற பேருந்தில் பயணம் செய்த அறுபதுக்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். வியாழன் அன்று அந்தப் பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்தது. எதிரே வந்த லாரி மீது மோதுவதைத் தவிர்க்க 54 வயது ஓட்டுநர் ஆர். மூர்த்தி முயற்சி செய்தபோது பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் 200 அடி ஆழத்தில் பேருந்து விழுவதைத் தடுப்புச் சுவர் ஒன்று தடுத்துவிட்டது என்றும் காவல் அதிகாரிகள் கூறினர். பேருந்திலிருந்த அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். பயணிகள் இறங்கிய பிறகு பாரந்தூக்கி மூலம் பேருந்து மேலே இழுத்து வரப்பட்டது. இந்த சம்பவத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். படம்: இந்து இணையம்

Loading...
Load next