‘ஆசிரியைகள் பஞ்சாபி உடை அணிய அனுமதியில்லை’

சென்னை: சுடிதார் அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியைகளின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக் கையைத் தமிழகக் கல்வித் துறை நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் இதர துறை களைப் போலவே கல்வித் துறையில் உள்ள பெண் ஆசிரியர்களுக்கும் சுடிதார் அணிய அனுமதி தர வேண்டும் என்று முசிறி தாலுக்காவைச் சேர்ந்த பர்வதிபுரத்தின் பி. முத்து கிருஷ்ணன் என்பவர் ஆசிரியை களின் சார்பில் முதல்வர் எடப் பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். “சுடிதார் உடலை முழுமை யாக மறைக்கிறது. சேலையை அணிய விரும்பாதவர்கள் சுரிதார் அணிய விரும்பு கின்றனர்,” என்று தமது மனுவில் முத்துகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். இதனை நிராகரித்துள்ள தமிழக பள்ளி கல்வி இயக்குநரகம், “அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை,” என்று கூறியது. ஆனால் பெண் ஆசிரியர்கள் இதுவரை சுடிதார் அணிய அனு மதி கேட்டு நேரடியாக கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை.